fbpx

நல்லா போன வாழ்க்கை..!! திடீர்னு வந்த ராபர்ட்..!! முகம் மாறியது ஏன்..? இதுதான் காரணமா..? புதிய பதிவால் குழப்பிய ரச்சிதா..!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த தினேஷ் மற்றும் ரச்சிதா மகாலட்சுமி, பிரிவோம் சந்திப்போம் தொடரில் இணைந்து நடித்தபோது காதலித்து திருமணமும் செய்துக் கொண்டனர். பின்னர், நிகழ்ச்சிகள் அனைத்திலும் இவர்கள் இருவரும் ஒன்றாகவே கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொண்டபோது, வெளியில் இருந்து தினேஷ் ஆதரவு தெரிவித்தார். மேலும், ராபர்ட் மாஸ்டருடன் ரச்சிதாவை இணைத்து பேசப்பட்டபோது கோபப்பட்டார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் இணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தினேஷும் தான் ரச்சிதாவுடன் இணைந்து வாழவே விரும்புவதாக தன்னுடைய பேட்டிகளில் கூட கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தினேஷ் மீது ரச்சிதா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். தன்னை தினேஷ் ஆபாசமாக பேசி, மெசேஜ் அனுப்பி வருவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறியிருந்தார். இதையடுத்து, அவர்கள் இருவரும் விவாகரத்திற்கு அப்ளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தான் சிறப்பாக உள்ளதாகவும் எந்த விஷயமும் தன்னை காயப்படுத்தவில்லை என்றும் தினேஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்தவுடன் ரச்சிதா, தினேஷுடன் இணைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ரச்சிதாவின் போலீஸ் புகார் அதை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவர்கள் இருவரும் இனிமேல் இணைய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அழகான புகைப்படத்தை வெளியிட்டு ரச்சிதா ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

அதில் தான் எல்லாவற்றையும் தனக்குள்ளேயே வைத்துள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது என்றும் தனக்கு நேர்ந்த விஷயங்களில் இருந்து பாடங்கள் கற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களை மேலும் குழப்பியுள்ளது. அவர் தினேஷுடனான உறவு குறித்து அதிகமாக வெளிப்படுத்தாமல் உள்ள நிலையில், அதை குறிப்பிட்டே இந்த பதிவினை தற்போது வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

Chella

Next Post

அடுத்த சில நாட்களில் இந்த 18 மாநிலங்களுக்கும் கனமழை எச்சரிக்கை…..! இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!

Sun Jun 25 , 2023
இந்தியாவில் 18 மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. அது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், அசாம், மேகாலயா, நாகலாந்து மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், மேற்கு உத்தரப்பிரதேசம், […]

You May Like