சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து 7-வது சீசன் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதனால், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப்போகும் போட்டியாளர்கள் யார் யார் என்பது பற்றி இணையத்தில் நெட்டிசன்கள் கணித்து வருகின்றன. அதிலும், இதற்கு முந்தைய சீசனில் ஒரு செய்தி வாசிப்பாளரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து அவர்களை பிரபலமாக்கி விடுவார்கள்.
அந்த வகையில் இதுவரை நடந்த சீசன்களில் பாத்திமா, லாஸ்லியா, அனிதா சம்பத் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், இம்முறை ஒரு ஆண் செய்தி வாசிப்பாளரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாம். பிரபல நியூஸ் சேனல்களில் பணியாற்றிய நியூஸ் ரீடர் ரஞ்சித் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறாராம். இதுமட்டுமின்றி, நடிகை ரேகா நாயர், நடிகர் பப்லு, பெண் பஸ் ஓட்டுநர் ஷர்மிளா போன்ற 3 போட்டியாளர்கள் தேர்வான நிலையில், நான்காவதாக ரஞ்சித்தும் தேர்வாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.