fbpx

‘லியோ’ படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புதிய புகைப்படம்..!! விஜய்க்கு நன்றி தெரிவித்த லோகேஷ்..!!

‘எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி அண்ணா’ என நடிகர் விஜய்-க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்ஜய் தத், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். முன்னதாக மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், லியோ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து அவ்வப்போது வெளியாகும் புகைப்படங்களால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் காத்துள்ளனர். மேலும், லியோ படத்தின் ப்ர்ஸ்ட் ப்ரொமோ வீடியோவை வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ‘எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி அண்ணா’ என நடிகர் விஜய்-க்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

"காக்கா பிரியாணியா"! மூக்கு பொடியில் விஷம் கலந்து தூவி.......! கோவையில் அதிர்ச்சி!

Tue Mar 14 , 2023
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கடந்த சில தினங்களாக காக்கைகள் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன. இதற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் பெரும் குழப்பத்திலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவரது பெயர் சூர்யா என்றும் குஜராத்தைச் சார்ந்தவர் என்றும் தெரியும் வந்திருக்கிறது. தற்போது சர்க்கஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார் அந்த நபர். மூக்குப்பொடியில் ஏதேனும் ஒரு விஷம் மருந்தை தடவி ஆங்காங்கே […]

You May Like