எஸ்.ஜே.சூர்யாவும், யஷிகா ஆனந்தும் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இயக்குனராகவும், சிறந்த நடிகராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. கடந்த 1999ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “வாலி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனராக இருந்த இவர், பின்னர் நடிப்பாலும் மக்களை கவர்ந்து வருகிறார். மாநாடு படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்களால் பெரும் வரவேற்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களை லைன் அப் வைத்திருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதியான வெளியான ’கடமையை செய்’ படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும், இளம் வயது நடிகை யஷிகா ஆனந்தும் நடித்திருந்தனர். இந்நிலையில், படம் ரிலீஸ்க்கு பிறகும் இவர்கள் தனிமையில் சந்தித்து பல இடங்களுக்கு செல்வதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. தற்போது இருவரும் சேர்ந்து கடற்கரையில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.