fbpx

படப்பிடிப்பின் போது விபத்து..! நடிகர் விஷால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ’மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது மீண்டும் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

’லத்தி’ படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. கல்குவாரியில் நடைபெற்ற அந்த படப்பிடிப்பில் எதிர்பாராத விதமாக நடிகர் விஷாலுக்கு கால் முட்டியில் பலத்த அடிபட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அண்ணா நகர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் நடிகர் விஷாலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

படப்பிடிப்பின் போது விபத்து..! நடிகர் விஷால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!

ஏற்கனவே ஹைதராபாத்தில் நடைபெற்ற லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன் காரணமாக கேரளா சென்று ஒரு மாதம் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் சென்னையில் நடந்த ’லத்தி’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஷாலுக்கு அடிபட்டது. அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு விஷால் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போதும் விஷால் பலத்த காயம் அடைந்துள்ளார்.

Chella

Next Post

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு.. 3 ராணுவ வீரர்கள் வீர மரணம்..

Thu Aug 11 , 2022
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் உள்ள ராணுவ முகாமில் அத்துமீறி நுழைய முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் இன்று சுட்டுக் கொன்றது. இந்த நடவடிக்கையில் 3 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்றதை அடுத்து, என்கவுன்டர் நடந்தது.. இதில் 5 வீரர்கள் காயமடைந்தனர். என்கவுண்ட்டர் தற்போது முடிவடைந்துள்ளதாக இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. ராணுவ அதிகாரி உள்ளிட்ட காயமடைந்த ராணுவ […]

You May Like