விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானவை. இந்த நிகழ்ச்சி குழந்தைகளுக்காகவும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது. குட்டீஸ்களின் குரலில், சூப்பர் ஹிட் பாடல்களை கேட்க அதிகமானவர்கள் ஆர்வம் காட்டுவதால், இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அண்மையில் தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டது. இந்த சீசனின் நடுவர்களாக சித்ரா, பாடகர் அந்தோணி தாசனுடன் இசையமைப்பாளர் தமன் ஆகியோர் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் கெஸ்ட் வருவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த வாரம் சிறப்பு விருந்தினராக நடிகர் அப்பாஸ் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவில் திரைப்பட வாய்ப்பு இல்லாமல் வெளிநாட்டில் வசித்து வந்த அப்பாஸ், சின்னத்திரை மூலம் மீண்டும் ரீ – எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.