நடிகர் அஜித், லண்டனில் புதிய வீடு வாங்கி உள்ளதாகவும், அங்கேயே செட்டில் ஆக உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாத்துறைக்குள் வந்து இன்று கோடிக்கணக்கான ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார். தற்போது ’துணிவு’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார். வங்கிக் கொள்ளை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் அஜித் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் அஜித், லண்டனில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீட்டின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.100 கோடி இருக்கும் என தகவல் கசிந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித், தனது பைக்கில் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போதுதான் இந்த புதிய வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அஜித் விரைவில் லண்டனில் செட்டில் ஆக உள்ளதாகவும், படப்பிடிப்பிற்கு மட்டும் இங்கு வர ப்ளான் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.