fbpx

அறுவை சிகிச்சைக்கு பிறகு முதல்முறையாக போட்டோ வெளியிட்ட அஜித் பட நடிகர்..!! நடந்தது என்ன..?

தமிழில் பிரபல இயக்குனரான சிவா, இயக்குனர் ஆவதற்கு முன்பே கதாநாயகனாக அறிமுகமானவர் அவரது தம்பி நடிகர் பாலா. அஜித்தின் வீரம், ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள பாலா, மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது முதல் மனைவி அம்ருதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த மாதம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்த சிகிச்சைக்கு முன்னர் ஒரு வீடியோ மூலமாக பேசிய பாலா, இந்த அறுவை சிகிச்சை ரிஸ்க் ஆனது என்றும், ஒருவேளை இந்த சிகிச்சை முடிந்த பின் தான் உயிர் பிழைக்கக்கூட வாய்ப்புகள் குறைவு என்றும் உருக்கமாக பேசியிருந்தார். சமீபத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்தபடியே தனது மனைவி எலிசபெத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, தான் நலமாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷப் மஹிந்திரா காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

Wed Apr 12 , 2023
மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷப் மஹிந்திரா காலமானார். அவருக்கு வயது 99. அண்மையில் வெளியான ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். இந்தியாவின் அதிக வயதான கோடீஸ்வரர் என அறியப்பட்டவர். அவரது மொத்த சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள் ஆகும். 1963 முதல் 2012 வரையில் சுமார் 50 ஆண்டு காலம் மஹிந்திரா குழும தலைவராக இயங்கியவர். 1947ஆம் ஆண்டு தனது தந்தையின் நிறுவனமான […]
மஹிந்திரா குழுமத்தின் முன்னாள் தலைவர் கேஷப் மஹிந்திரா காலமானார்..!! தலைவர்கள் இரங்கல்..!!

You May Like