தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் அர்ஜுனும் ஒருவர். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக கலைஞராக திகழ்ந்தவர் அர்ஜுன். தற்போது நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். 80, 90களில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். கராத்தே, மார்ஷல் ஆர்ட்ஸ் போன்ற கலைகளை கற்ற அர்ஜுன், ஒரு ஆக்ஷன் கிங் ஆக சினிமாவில் ஒரு தன்னிச்சையான இடத்தை பிடித்தவர். பெரும்பாலான படங்கள் போலீஸ் கதையை மையப்படுத்தி அமைந்ததால் ஒரு தேசப்பற்று மிக்க நடிகராகவே மக்கள் முன் காணப்பட்டார்.
ஆனால், சமீப காலமாக வில்லன் கதாபாத்திரம், குணசித்திர கதாபாத்திரம் என தன்னுடைய நடிப்பின் பரிணாமத்தை மாற்றி இருக்கிறார். பொதுவாக வில்லன் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அர்ஜுன் சென்னையில் அனுமன் கோயிலையும் கட்டியுள்ளார். இவருடைய மகளான ஐஸ்வர்யா ஒரு நடிகையும் கூட. பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நடிகர் தம்பி ராமையாவின் மகனும் இயக்குனருமான உமா பாரதியை சில ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.
இரு வீட்டாரின் சம்மதத்தைப் பெற ஐஸ்வர்யாவும், உமா பாரதியும் இத்தனை நாட்களாக காத்திருந்தார்களாம். ஒருவழியாக அர்ஜுனும், தம்பி ராமையாவும் இவர்களின் காதலுக்கு பச்சை கொடி காட்ட இவர்களுடைய திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.