நடிகர் சித்தார்த் மணிரத்தினம் இயக்கிய பிரபல திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியை காதலிப்பதாக அவரே தகவல்கள் வெளியிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த், ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்த அவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் ஒரு சில நடிகைகளை காதலிப்பதாக ஏற்கனவே வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’செக்கச் சிவந்த வானம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை அதிதி ராவ் ஹைத்ரி உடன் சித்தார்த் காதல் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இருவரும் இணைந்து பல பொது இடங்களுக்கு சென்று வருவதாகவும் விரைவில் இருவரும் தங்கள் காதலை அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் ஹைத்ரி சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்து கூறிய சித்தார்த், ‘என் இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து இருவரும் காதலிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதிராவ் ஹைத்ரி தற்போது ’மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பின் போதுதான் இருவருக்கும் காதல் மலர்ந்தது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமூக வலைத்தலங்களில் நடிகர் சித்தார்த் தனது காதலை வெளிப்படுத்திவிட்டார் என கூறி தகவல்கள் வருகின்றது.
நடிகை அதிதி ராவ் ஹைத்ரி கடந்த 2009ஆம் ஆண்டு சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து அதன்பின் 2013ஆம் ஆண்டு பிரிந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.