fbpx

நடிகர் வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’..!! ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்..!!

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் தனக்கென நகைச்சுவை பாணி அமைத்து, இன்றளவும் மீம்ஸ் கிரியேட்டர்களால் அதிகம் பேசப்படுபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. நகைச்சுவை மட்டுமின்றி குணசித்திர கதாபாத்திரத்திலும் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட நடிகர் வடிவேலு, சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் முதன்மையான ஹீரோவாக நடித்து அதிலும் வெற்றிக்கண்டார். வரலாற்று கதை போன்று எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் 2-ம் பாகமான ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, கடந்த 2018ஆம் ஆண்டு படப்பிடிப்பும் நடந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்புக்கு நடிகர் வடிவேலு வரவில்லை என்று கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்களான எஸ் பிக்சர்ஸ் சார்பில் ஷங்கரும், லைகா சார்பில் சுபாஷ்கரனும் புகார் அளித்தனர்.

நடிகர் வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’..!! ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்..!!

மேலும் பல இயக்குநர்கள் நடிகர் வடிவேலு மீது நடிகர் சங்கத்தில் புகார் தர, படத்தில் நடிக்க அவருக்கு ரெட் கார்டு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாறி மாறி இரு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் இனி எப்போதும் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் வடிவேலு அறிவித்திருந்தார். அதன்பிறகு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்ஷேனல் தயாரிப்பு நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தலையிட்டு இந்தப் பிரச்சனைக்கு கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில் கம்பேக் கொடுக்கும் வகையில், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுராஜ் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அண்மையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நடிகர் வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’..!! ரிலீஸ் தேதி குறித்து வெளியான தகவல்..!!

இந்நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மாதம் படம் வெளியாகவுள்ளதாகவும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.

Chella

Next Post

பெங்களூருவில் ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்டால் இதோ இந்த எண்ணுக்கு அழையுங்கள்…

Mon Oct 3 , 2022
பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் குறுகிய தூரத்திற்கே அதிக அளவு கட்டணம் கேட்பார்கள் அவ்வாறு கேட்டால் ,இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யுங்கள் . பெங்களூருவில் புதிதாக பயணம் செய்பவர்கள் மற்றும் குறுகிய தூரத்திற்கு பயணம் செய்யும் பெங்களூருவாசிகளுக்கு ஆட்டோ கட்டணம் கூடுதலாக கேட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது. ஆட்டோவில் பயணம் செய்பவர்கள் இறங்கியதும் கூடுதலாக கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவார்கள். குறுகிய தூரத்திற்கே அதிக அளவில் […]

You May Like