fbpx

பிரபல நடிகையின் மரணத்தால் சினிமாவை தொலைத்த நடிகர்..!! யாருன்னு தெரியுதா..? இப்போ என்ன செய்கிறார் தெரியுமா..?

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் தருண் குமார். இவரக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இவர், 1983ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு சீரியல் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருடைய அம்மா ரோஜா ரமணி சீரியல் நடிகை. இவருடைய அம்மா சீரியல் ஆர்ட்டிஸ்டாக இருந்ததால், அவர் சந்திக்கும் பிரபலங்கள் எல்லோரிடமும் தனது மகனையும் அறிமுகப்படுத்தி இருந்தாராம். இதனால் தான் இவருக்கு 1990இல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வாய்ப்பும் கிடைத்ததாம்.

இப்படத்திற்காக இவர் தேசிய விருதும் பெற்றாராம். தொடர்ந்து மலையாள சினிமாவிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாராம். அதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் நுவே தவாலி என்னும் படத்தின் மூலம் தான் கதாநாகனாக அறிமுகமாகினார். இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டையும் பெற்றுக் கொடுத்தது. தெலுங்கு சினிமாவில் பல படங்களிலும் தமிழில் காதல் சுகமானது, புன்னகை தேசம் என பல படங்களில் நடித்திருந்தார். 2009 வரை நடித்து வந்த இவர் படவாய்ப்பு கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகினார். பின்னர் 2014இல் யுதம் என்னும் தெலுங்கு படத்தில் நடித்தார்.

இப்படமும் தோல்வி அடைந்தது. இப்படி இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியுற்றதோடு தெலுங்கு சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வந்த ஆர்த்தி தற்கொலை செய்து இறந்து போனதற்கு இவர் தான் காரணம் என்றும் அந்த காலத்தில் பேசப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆர்த்தி அகர்வாலின் இறப்பு குறித்து எந்தவொரு தகவலையும் தருண் சொல்லாமல் இருந்தார். இதனால் அவருடைய அம்மாவான ரோஜா ரமணி ஓர் பேட்டியில், ஆர்த்தி அகர்வாலுக்கும் என் பையனுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை. அவங்க வெறும் நண்பர்கள் தான். அந்த பொண்ணு இறந்ததால் என்னுடைய பையனின் கெரியர் தான் காணாமல் போச்சு தயவு செய்து இப்படி பேசாதீங்க என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தொடர்ந்து படவாய்ப்பு இல்லாததால் சினிமாவை விட்டு விலகி தனியாக பிஸ்னஸ் செய்து வருகின்றாராம் தருண். அதோடு 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் முடிக்காமலும் இருக்கின்றாராம். இவருக்கு கிரிக்கெட் என்றால் ரொம்பவும் பிடிக்குமாம். சினிமாவை தேர்வு செய்யாமல் இருந்திருந்தால் இவர் கிரிக்கெட் பக்கம் தான் போயிருப்பார் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

திருநங்கைகள் குழந்தையை தத்தெடுக்கலாமா..? கூடாதா..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Sat Jul 1 , 2023
குழந்தையை தத்தெடுக்க அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் குடியேற்றத்துறை அதிகாரியாக பணிபுரிபவர் தான் திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர், ஏற்கனவே தமிழக காவல்துறையில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தவர். தற்போது குடியேற்றத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், “பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை […]

You May Like