fbpx

’சமந்தாவை தொடர்ந்து வினோத நோயால் அவதிப்படும் நடிகை அனுஷ்கா’..!! படப்பிடிப்பு நிறுத்தம்..!!

சிரிப்பை அடக்க இயலாமல் தவிக்கும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், படப்பிடிப்பு அடிக்கடி நிறுத்தப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா.

ப்ரண்ட்ஸ் படத்தில் சிரிப்பை அடக்க இயலாமல் தவிக்கு விஜய்யை போல நிஜத்தில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் நடிகை அனுஷ்கா. தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் சிம்ரனுக்கு அடுத்த படியாக ரசிகர்களை அதிகம் கவர்ந்த கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. பாகுபலி 2-க்கு பின்னர் உடல் பருமன் காரணமாக சைலன்ஸ், ஜதி ரத்னலு படங்களை தவிர சொல்லிக் கொள்ளும் அளவுக்கான படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அனுஷ்கா, சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் உடல் எடையை குறைத்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தனக்கு விசித்திரமான நோய் ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தான் சிரிக்க தொடங்கினால், அதனை நிறுத்த இயலாமல் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தவிக்கும் நிலையில் உள்ளதாகவும், சில நேரங்களில் தனது சிரிப்பை அடக்க இயலாத காரணத்தால் பலமுறை படப்பிடிப்பு கூட நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக தனக்கு இருந்து வரும் , இந்த பிரச்சனை தொடர்பாக மருத்துவரை சந்தித்த போது, சிரிப்பை அடக்க இயலாதது ஒரு விசித்திரமான நோய் என்று கூறியதாகவும், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் நடிகை அனுஷ்கா வேதனை தெரிவித்தார். ஏற்கனவே நடிகை சமந்தா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் மையோசிடிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னனி நடிகையான அனுஷ்காவும் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

Chella

Next Post

Hero நிறுவனத்தில் டிகிரி முடித்த நபர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

Fri Feb 17 , 2023
Hero Motocorp லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Executive பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தில் பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் அல்லது பல்கலைக்கழகங்களில் எதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் […]

You May Like