டிவி நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமாகி சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கின்றனர். அப்படி இருக்கும் நிலையில், தனக்கென்று அடையாளத்தை சீரியல் மூலம் ஏற்படுத்திக் கொண்டவர் தான் ஜனனி அசோக்குமார். இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சீரியல் நடிகை. இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். இவர் நடிகை நயன்தாராவுடன் இணைந்து 2015ஆம் ஆண்டு வெளிவந்த நண்பேண்டா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அதன் பிறகு 2018ஆம் ஆண்டு சமுத்திரகனி அதுல்யா ரவி நடிப்பில் வெளிவந்த ஏமாளி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட மாப்பிள்ளை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செம்பருத்தி போன்ற ஏராளமான தொடர்களில் நடித்து வந்தார்.

தனக்கு வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சீரியல் மட்டும் சினிமாவில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் குடும்ப புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில், ஜனனி அசோக்கும் தனது அப்பா அம்மா அக்கா என்ன குடும்பத்துடன் இருக்கும் படி அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.