fbpx

காதலனுக்காக காத்திருக்கிறாரா கனகா..? கமலுக்கு பயந்து ’நோ’ சொன்னது ஏன்..? பிரபலம் சொன்ன பகீர் தகவல்..!!

தமிழ் சினிமாவில் 90-ஸ் காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்தவர் கனகா. இவர், சமீப காலமாக லைம் லைட்டில் இல்லாமல் இருக்கிறார். அதற்கான காரணம் குறித்து சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவலை கூறியுள்ளார்.

அதாவது, கனகா தன் முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. கமலுடன் நடித்தால் முத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றும், அது மகளின் இமேஜை பாதிக்கும் என அவரின் தாய் நினைத்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். கமலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கனகாவுக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், அதை கனகா மறுத்துவிட்டார். பின்னர் கனகாவுக்கு காதல் ஏற்பட்டது. அவர் யாரைக் காதலித்தார் என்பது இன்னும் யாருக்கும் தெரியாத ரகசியமாகவே உள்ளது.

அவர் தனது காதலனுடன் சில காலம் ஒன்றாக வாழ்ந்தது மட்டுமின்றி, காதலனுடன் வெளிநாடு சென்றுவிட்டார். அதற்கு பிறகு அவர் கனகாவை பார்க்க வரவில்லை. கனகா தனிமையில் இருந்தார். கனகாவின் தாய் கட்டிய பங்களாவில் உதவியாளருடன் தங்கியுள்ளார். யார் இண்டர்வியூவுக்கு போனாலும் வெளிச்சத்துக்கு வரவும், பேசவும் தயாராக இல்லை என சொல்கிறாராம்.

மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறார். கனகா வீட்டில் சண்டை ஏற்பட்டு, போலீஸ் வந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பது வழக்கம். அவர் தங்கியிருந்த வீடு தீப்பிடித்த போது கூட அங்கு வந்த தீயணைப்பு வீரர்களிடம் கனகா தேவையில்லாமல் சண்டையிட்டுள்ளார். அந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, கனகாவுக்கு மனநலப் பிரச்சனை இருந்ததா என்ற கேள்வி மீண்டும் எழத் தொடங்கியது. ஆனால் கனகா யாரையும் தன் வீட்டிற்கு வந்து பேச விடவில்லை. சிகிச்சை எடுக்கவும் அவர் தயாராக இல்லை. எப்போதுமே தனியாக இருப்பதையே விரும்புகிறார். காதலனுக்காக காத்திருக்கிறாள் என்பதுதான் அதற்கு பதில்” என்றார் பயில்வான்.

Read More : வெளிமாநில பெண்ணை வரவழைத்து அடிக்கடி உல்லாசம்..!! பணம் தராததால் அதிமுக நிர்வாகியை ஓட விட்ட பெண்..!!

English Summary

She not only lived together with her boyfriend for some time, but also went abroad with him.

Chella

Next Post

இந்த வாரம் சந்திரனுக்கு துணையாக வரும் மினி நிலா..!! நம்மால் பார்க்க முடியுமா?

Wed Sep 25 , 2024
Earth To Have Second Moon This Week: Will It Be Visible?

You May Like