fbpx

நடிகை லட்சுமி மேனனுக்கு திருமணம்..? மாப்பிள்ளை இந்த நடிகர் தானா..? ரசிகர்கள் வாழ்த்து..!!

தமிழ் சினிமாவில் கும்கி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான லட்சுமி மேனனுக்கு முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் பிஸியான நடிகையாக மாறினார். இதனையடுத்து இரண்டாவது படம் சசிகுமாருக்கு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ என்ற படத்தில் நடித்தார். இந்த படமும் இவருக்கு ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் லட்சுமி மேனன் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

பின்னர் ‘குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன்’ என தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். மேலும் ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது இவர் ‘சிப்பாய்’ என்ற படத்திலும், ‘சந்திரமுகி 2’ படத்திலும் நடித்து வருகிறார். 27 வயதாகும் நடிகை லட்சுமி மேனன், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி வெளியாகி உள்ளது.

அந்தவகையில், இவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் மாப்பிள்ளை பிரபல நடிகர் என்று கூறப்படுகிறது. முன்பதாக நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியான வண்ணம் இருந்தது. இவ்வாறு கிசுகிசுக்கப்பட்ட விஷாலைத் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். எது எவ்வாறாயினும் ரசிகர்கள் இப்போதிருந்தே லட்சுமி மேனனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டனர்.

Chella

Next Post

ஹரியானா அருகே மத ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரம்.., பற்றி எரிந்த கார்கள்…..! அச்சம் காரணமாக கோவிலுக்கு தஞ்சம் அடைந்த பொதுமக்கள்….!

Tue Aug 1 , 2023
பொதுவாக ஜாதி கலவரம், மத கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நாட்டில் எழுவது சகஜமான ஒன்றுதான். ஆனாலும் அதனை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அப்படி ஜாதி, மத ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட்டால் அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதும் அரசாங்கத்தின் கடமை தான் என்று எல்லோருக்கும் தெரியும். ஹரியானா மாநிலம் குருகிராமுக்கு அருகே இருக்கின்ற நூக என்ற பகுதியில் ஒரு மிகப்பெரிய மத ஊர்வலம் நடைபெற்றது. […]

You May Like