தென்னிந்திய நடிகைகளில் அதிக சொத்து வைத்திருக்கும் டாப் 5 நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சினிமா என்றாலே ஆண்கள் அதிகம் ஆட்சி செய்யும் தொழில் என்ற பேச்சு உண்டு. அதன்படிதான் இப்போதும் பெரும்பாலும் நடந்து வருகிறது. அதேசமயம் ஹீரோக்களை மையப்படுத்திய கதைகள் வருவது போலவே ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகள் வருவதும் தற்போது அதிகரித்திருக்கிறது. இருப்பினும் சம்பள விஷயத்தில் ஹீரோக்களுக்கும், ஹீரோயின்களுக்கும் மலை அளவு வித்தியாசம் உள்ளது.
ஹீரோக்கள் ரூ.100 கோடியை சம்பளமாக பெறும் பழக்கம் எப்போதோ வந்துவிட்டது. ஆனால், ஹீரோயின்கள் ஒரு கோடி ரூபாயை தொடுவதற்கே பல காலம் ஆகிறது. தற்போது தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். அவர் ஜவான் படத்துக்காக 10 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும், இனி வரும் படங்களில் தனது சம்பளத்தை அதிகரிக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சினிமாவில் இருக்கும் வெகு சிலரை தவிர்த்து சினிமா மூலம் சம்பாதிக்கும் பணத்தை பிற தொழில்களில் முதலீடு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடிகர்கள் அவ்வாறு செய்துகொண்டிருக்க நடிகைகளும் இப்போது அதில் அதீத கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். நயன்தாரா கூட தற்போது கேரளாவில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிக்கொண்டிருப்பதாகவும், அதை வாடகைக்கு விட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிற தொழில்களில் வரும் வருமானம் மூலம் நடிகர்களும், நடிகைகளும் சொத்துக்களை அதிக அளவு சேர்த்து வைத்திருக்கின்றனர். இந்தச் சூழலில் தென்னிந்திய நடிகைகளில் அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் டாப் 5 நடிகைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாரா தான் முதலிடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
நயன்தாராவுக்கு அடுத்து தமன்னா இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 110 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. தமிழில் நடிக்கும்போது கொஞ்சமே சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த தமன்னா ஹிந்திக்கு சென்று ஃபேமஸ் ஆன பிறகு தனது சம்பளத்தை உயர்த்திவிட்டார். அதேபோல் மூன்றாவது இடத்தில் அனுஷ்கா இருக்கிறார். அவருக்கு 100 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் படம் எதிலும் நடிக்காவிட்டாலும் அவர் பீக்கில் இருந்தபோது சம்பாதித்த பணத்தை சரியான தொழிலில் முதலீடு செய்து இவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறாராம். அதேபோல் நான்காவது இடத்தில் சமந்தாவும் (89 கோடி ரூபாய் சொத்து), ஐந்தாவது இடத்தில் பூஜா ஹெக்டேவும் (50 கோடி ரூபாய் சொத்து) இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.