தமிழ் திரையுலகில் 90 காலப்பகுதியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து ரசிகர்கள் பலரின் மனதை கொள்ளை கொண்டவரே நடிகை ரம்பா. நடிப்பில் பட்டையை கிளப்பி வந்த இவர், கடந்த 2010ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து தற்போது 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நடிகை ரம்பா தன்னை ஏமாற்றியதாக கூறி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார். அதாவது “3 Roses படத்தின் போது ரம்பா தன் சகோதரனை வைத்து தயாரித்திருந்தார். அதற்காக ரம்பா என்னிடம் 4 கோடிக்கும் மேல் பணம் வாங்கியிருந்தார். ஆனால், அதனை திருப்பித் தரவில்லை. இதனால் போலீஸ் வந்து விசாரித்தார்கள். அதன்பின் 3.5 கோடி தருகிறேன் என்று ரம்பாவின் சகோதரர் சொன்னார். ஆனால், அதன் பின்னரும் அதை தராமல் ஏமாற்றினார்கள்” எனக் கூறியுள்ளார்.
மேலும் “இந்தப் பிரச்சனையின் போது உடனே ரம்பா, மீடியாவை கூப்பிட்டதால், PRO நெல்லை சுந்தரம் ஒட்டுமொத்த மீடியாவை கூப்பிட்டதால் நடிகை பக்கம் அனைவரும் சென்றனர். நான் தான் தப்பு பண்ண மாதிரி எல்லாரும் பேசினார்கள். இது அப்போ பரபரப்பாக நடந்தது. நான் பப்ளிசிட்டிக்காக இப்போ இப்படி சொல்லல. நான் யாரையும் கூப்பிட்டு பேசுறது கிடையாது. எனக்கு தான் அவ பணம் தரணும், ரம்பாவுக்கு எழுதி வைத்து தான் காசு கொடுத்தேன். அவ மேல் கேசு போட்டேன், அது அப்படியே போச்சு” என மாணிக்கம் நாராயணன் தெரிவித்துள்ளார்.