தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர், நடிப்பில் கடந்த ஆண்டு புஷ்பா திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2-வில் நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் நடிகை சாய் பல்லவியும் இணைந்துள்ளார். இப்படத்திற்கு 10 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகை சாய் பல்லவி பழங்குடியின பெண்ணாக நடிப்பதாகவும் படத்தில் அவரின் கதாபாத்திரம் சர்ப்ரைசாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்பிறகு புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் வீடியோ ஏப்ரல் 8ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும், சுமார் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட புஷ்பா திரைப்படம் 350 கோடி வரை வசூல் சாதனை புரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.