நடிகை த்ரிஷாவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் செய்த பதிவு ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் த்ரிஷா. இது சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து படங்கள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், த்ரிஷா வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
த்ரிஷா ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென தவறி விழுந்து அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு த்ரிஷா நாடு திரும்பி விட்டதாகவும் அங்கு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, சுற்றுலா பாதியில் முடிந்தது என குறிப்பிட்டார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.