fbpx

40 வயதில் மறுமணம் செய்த நடிகை ஊர்வசி..!! குடிக்கு அடிமையானதால் குடும்பத்தில் வெடித்த பிரச்சனை..?

மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின் கே.பாக்யராஜ் இயக்கத்தில் உருவான முந்தானை முடிச்சு படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்தவர் நடிகை ஊர்வசி. தொடர்ந்து அபூர்வ சகோதரிகள், கொம்பேறி மூக்கன், நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தாள், அன்பே ஓடிவா என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

இவர், 90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். பின்னர், இவர் கடந்த 2000ஆம் ஆண்டு நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2008இல் அவரை விட்டு பிரிந்தார் ஊர்வசி.

இதற்கிடையே, எங்களது விவாகரத்திற்கு மனோஜ் குடும்பம் தான் காரணம். அவர்கள் தான் என்னை குடிக்கு அடிமையாக்கி விட்டார்கள். இதனால் தான் விவாகரத்தும் ஆனது என பேசியுள்ளார் ஊர்வசி. குடி என்ற காரணத்தை காட்டி எனது மகளையும் என்னிடம் இருந்து பிரித்துவிட்டனர். அப்போது நான் தனிமையில் மன அழுத்தத்தில் இருந்த போது எங்களுடைய குடும்ப நண்பர் சிவபிரசாத் என்பவரை மறுமணம் செய்துகொண்டேன்.

மறுமணம் ஆகும் போது எனக்கு வயது 40. அந்த வயதில் மறுமணமா என பலரும் விமர்சித்தனர். ஆனால் அதை எல்லாம் நான் என் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை. தற்போது எங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் நாங்கள் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் நடிகை ஊர்வசி.

Chella

Next Post

பிரபல யூடியூபரை கரம்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை..!! வைரலாகும் திருமண புகைப்படங்கள்..!!

Mon Aug 28 , 2023
தமிழ் சின்னத்திரையில் ரீல் ஜோடிகளாக சீரியலில் நடித்து வருபவர்கள், தற்போது ரியல் ஜோடிகளாக மாறி வருகின்றனர். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களின் காதல் திருமணம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்தவகையில், சின்னத்திரையில் தற்போது வேறு வேறு சேனலை சேர்ந்த பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஜனனி பிரதீப். அதேபோல் யூடியூப் மூலம் […]

You May Like