விஜய் டிவியில் ஒளிபரப்பான நடிகை வனிதா விஜயகுமார், சினிமா மட்டுமின்றி சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர், பிக்பாஸ் ஷோவுக்கு பின்பு சினிமா மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், விரைவில் தொடங்க இருக்கும் பிக்பாஸ் 7 சீசனில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வனிதாவிற்கு புதிய நோய் ஒன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுதொடர்பாக வனிதா அளித்திருக்கும் ஒரு பேட்டியில், தனக்கு Claustrophobia என்ற நோய் இருப்பதாகவும், இந்த நோய் இருப்பவர்கள் பூட்டிய இடங்களில் அதிக நேரம் இருக்க பயப்படுவார்கள். லிப்ட், கழிவறை போன்ற இடங்களில் கூட இருக்க பயப்படுவார்கள் எனவும் தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும் என்று வனிதா கூறியுள்ளார்.