ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மாரி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி சீரியல் முடிவுக்கு வந்ததிலிருந்து மாரி சீரியல் 45 நிமிடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், தற்போது தேவயானி முத்துப்பேச்சியாக இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், மாரி கோவில் திருவிழாக்காக சூர்யாவுடன் சமயபுரம் வந்துள்ளார். மாரியின் வீட்டில் சூர்யா மற்றும் மாரிக்கு முதலிரவு ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், நேற்றைய எபிசோடு சூர்யா மாரியின் கையை பிடிக்க அடுத்த சீனில் மாரி கர்ப்பமாக வருவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
இதனைப் பார்த்து ரசிகர்கள் அடேய் அவன் கைய தான பிடிச்சான், அதுக்குள்ள கர்ப்பமா என கலாய்த்து வருகின்றனர். மேலும், கட்டிப்பிடிச்சா குழந்தை பிறந்துடும்னு 90’ஸ் கிட்ஸ் நம்பிகிட்டு இருந்த மாதிரி இருக்கே என கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.