அதர்வா நடிக்கும் ’’ட்ரிகர்’’ திரைப்படம் குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் அருண்பாண்டியன் உள்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
’ டார்லிங், 100, கூர்கா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். ’ட்ரிகர் ’’ படத்தில் அதர்வா நடித்துள்ளார்.ஜிப்ரான் இசை அமைத்துள்ள இப்படத்தை மிராக்கிள் மூவிஸ் மற்றும் பிரமோத் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தைத் தயாரித்துள்ளன.இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்திற்கு வசனங்களை எழுதி உள்ளார். மேலும் எடிட்டர் ரூபன் இப்படத்திற்குப் படத்தொகுப்பு செய்துள்ளார்.
குழந்தை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன் மற்றும் அருண்பாண்டியன் உட்படப் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வரும் இம்மாதம் 23ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் 01.30 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த டீசரில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகளில் அதர்வா மாஸாக உள்ளார்