நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் ஹீரோயினாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில், லேட்டஸ்ட் தகவலாக விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க அதிதி ஷங்கர் கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தை ராம் குமார் இயக்கப்போகிறார். இதற்கு முன் ராம்குமார் மற்றும் விஷ்ணு விஷால் கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து இந்த கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ள படத்தில் தான் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.