இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, மாளவிகா, நாசர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. இந்தத் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியும் பெற்றது.
இதையடுத்து, தற்பொழுது மீண்டும் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இதில் லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத் உள்ளிட்டோர் பலரும் நடித்துள்ளனர். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று வருகிறது.