பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ள ஆயிஷா என்ற மலையாள படம் கடந்த வாரம் வெளியானது.. இந்த படத்திற்கான புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய மஞ்சு வாரியர் “ அசுரன் படத்திற்கு முன்பே தமிழ் படங்களில் நடிக்க எனக்கு அதிக வாய்ப்புக்கள் வந்தது.. அப்போது மலையாளத்தில் பிசியாக இருந்ததால் என்னால் தேதி ஒதுக்க முடியவில்லை.. மேலும் சில பிரச்சனைகள் காரணமாக என்னால் அப்போது நடிக்க முடியாமல் போனது..
’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நான் நடிக்க வேண்டியது.. அப்படத்தின் இயக்குனர் ராஜீவ் மேனன் முதலில் என்னிடம் கேட்டார்.. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நான் நடிக்கவில்லை.. அந்த கதாப்பாத்திரத்தில் தான் ஐஸ்வர்யா ராஜ் நடித்தார்..” என்று தெரிவித்தார்..
கடந்த 2000-ம் ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.. இதில் மம்முட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.