fbpx

கமல் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்..? கோலிவுட்டில் பரபரப்பு..!! வெளியான முக்கிய தகவல்..!!

நடிகர் கமல்ஹாசன் படத்தை எச்.வினோத் இயக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித் – எச்.வினோத் கூட்டணி இணைந்துள்ளது. துணிவு படத்தை தொடர்ந்து எச்.வினோத் விஜய் சேதுபதியை இயக்குவார் என உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே நேரம் அடுத்த படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகர் அஜித் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. லைகா தயாரிக்கும் இந்த படத்திற்காக விக்னேஷ் சிவன் தற்போது ப்ரீ புரொடக்சன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

கமல் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்..? கோலிவுட்டில் பரபரப்பு..!! வெளியான முக்கிய தகவல்..!!

இந்நிலையில் எச்.வினோத் – கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு படம் உருவாகவுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. ’விக்ரம்’ படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளன. இந்தியன் முதல் பாகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்ததாக மலையாள சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

கமல் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்..? கோலிவுட்டில் பரபரப்பு..!! வெளியான முக்கிய தகவல்..!!

இந்த படத்தை தொடர்ந்து எச்.வினோத்துடன் கமல் இணைவார் என்று பேசப்படுகிறது. தற்போது துணிவு படத்தின் டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகி விஜய்யின் வாரிசு படத்துடன் மோதுகிறது.

Chella

Next Post

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றது ’காஃபி வித் காதல்’!!

Sun Oct 30 , 2022
இயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ’காஃபி வித் காதல்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகின்றது. இப்படத்தில் நடிகர்கள் ஜீவா, ஜெய், மாளவிகா ஷர்மா, அம்ரிதா ஐயர், ரெய்சா வில்சன், திவ்யதர்ஷினி, யோகிபாபு, ஸ்ரீகாந்த், சம்யுக்தா உள்பட பலர் இப்படித்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியாகி இருக்க வேண்டிய திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படம் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் இப்படம் தள்ளிப்போனது. […]

You May Like