தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரின் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டாலும் தொடர்ந்து நண்பர்களாகவே தங்களது பணியில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித், விஜய் பற்றி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, “அஜித் ஆரம்ப காலகட்டத்தில் என்னிடம் பணம் வாங்கி இருந்தார். சினிமாவில் நன்றாக வந்தபின் ஒரு படம் பண்ணித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றி விட்டார். மேலும், நடிகர்-நடிகைகள் படத்தில் நடித்தால் பிரமோஷனிற்க்கு வர வேண்டும். இப்படி வரமாட்டேன் என்று கூறுபவரை வைத்து எதற்காக படம் பண்ண வேண்டும். விஜய் அந்த விஷயத்தில் தன்னடக்கமானவர். ஒரு விஷயத்தை பேசி எளிதாக புரிய வைத்துவிடலாம்.
விஜய் நன்றாகவும் நடிப்பார். நல்ல குணமுடையவர். ஆனால், அஜித் அப்படி இல்லை. நிஜத்தில் நன்றாக நடிப்பார். சினிமாவில் நடிக்கவே தெரியாது. தொப்பையை காட்டிக் கொண்டு ஆட மட்டும்தான் தெரியும்” இவ்வாறு அஜித்தை தர குறைவாக பேசியிருக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.