விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் நடிகர் ஆரி. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதற்கு பிறகு அவர் அதிகம் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு படம் கூட அவர் ஹீரோவாக நடித்து பிக்பாஸுக்கு பிறகு வெளிவரவில்லை.
பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பிறகு ஆரிக்கு பல இயக்குனர்கள் கதை சொல்ல போனார்களாம். ஆனால், ஆரி அந்த கதைகளில் அதிகம் மாற்றங்கள் செய்ய கூறினாராம். மேலும், படத்தின் வசனங்கள் உள்ளிட்ட பல விஷயங்களிலும் அவர் செய்ய சொன்ன மாற்றங்கள் அதிகம் இருந்ததால் பல இயக்குனர்கள் தலைதெறிக்க ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அதனால் படிப்படியாக ஆரியை தேடிவரும் வாய்ப்புகள் குறைய, தற்போது அவர் எந்த படமும் கைவசம் இல்லாமல் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.