fbpx

பிக்பாஸ் டைட்டில் வின்னருடன் ஜோடி சேரும் அனிகா..!! அந்த ஹீரோ யார் தெரியுமா..?

அஜித் நடித்த என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிதா சுரேந்திரன் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் அனிகா சுரேந்திரன் நாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னர் முகின் என்பதும், இவர் ஏற்கனவே ’வேலன்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில், ’வேலன்’ இயக்குனர் கவின் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் முகின் தான் ஹீரோ என்றும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை, நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் இயக்குனர் கவின் தெரிவித்துள்ளார்.

இது ஒரு த்ரில் கதையம்சம் கொண்டது என்றும் ஃபேமிலி சென்டிமென்ட் அம்சங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆஷா சரத், ஆதித்யா கதிர் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

Chella

Next Post

உரிமைத்தொகை ரூ.1,000..!! உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன வேண்டும்..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Fri Jul 14 , 2023
மகளிர் உரிமைத்தொகை 1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை நிர்வாக அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் பெண்கள், 21 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். மேலும், ரேஷன் கடை பணியாளர், வீடுகளுக்கே சென்று விண்ணப்பப் படிவத்தை வழங்க வேண்டும் எனவும், விண்ணப்பப் பதிவின் போது கடவுச்சொல் அனுப்பப்படும் என்பதால், […]

You May Like