fbpx

’பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியை தொடர்ந்து மற்றொரு நடிகர் விலகல்..!! யார் தெரியுமா..? ரசிகர்கள் கவலை..!!

சதீஷை தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை விட்டு மற்றொரு நடிகரும் விலகியிருக்கிறார்.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி, மாமியார் ஈஸ்வரியாக பிரபல நடிகை ராஜலட்சுமி, மூத்த மகன் செழியனாக விகாஷ் சம்பத், இளையமகன் எழிலாக விஜே விஷால், மகள் இனியாவாக நடிகை நேஹா மேனன், மருமகள் ஜெனியாக திவ்யா கணேஷ், இளைய மருமகள் அமிர்தாவாக ரித்திகா தமிழ்செல்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு முன்னாள் காதலி ராதிகாவை 2-வது திருமணம் செய்துக் கொள்ளும் கோபி, நடிப்பில் அசால்ட்டாக ஸ்கோர் செய்து வருகிறார். இந்நிலையில், கோபியாக நடித்து வந்த சதீஷ், பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மற்றொரு நடிகரும் பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகியிருக்கிறார். கோபியின் நண்பர் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர், தற்போது விலகியிருக்கிறார். அவருக்கு பதில் நடிகர் அரவிந்த் தற்போது அந்த ரோலில் நடிக்கிறார். ‘அவருக்கு பதில் இவர்’ என நேற்றைய எபிசோடில் குறிப்பிட்டு, அரவிந்தின் காட்சி ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

”சில பேர் ஸ்டைல் பண்ணா ம** மாதிரி இருக்கும்”..!! நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..!!

Thu Apr 27 , 2023
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நாளை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் புரமோஷனுக்காக கடந்த 10 நாட்களாக நாடு முழுவதும் சுற்றிவந்த படக்குழு, இன்று சென்னையில் நடைபெற்ற பிரஸ்மீட் மூலம் அதனை முடித்துள்ளது. இந்த பிரஸ்மீட்டில் படத்தில் நடித்த ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டு பேசினர். குறிப்பாக பார்த்திபன் பேசிய பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில், “மணிரத்னத்தின் அசிஸ்டண்ட் வந்து பொன்னியின் செல்வன் 1 படத்தின் […]
”சில பேர் ஸ்டைல் பண்ணா ம** மாதிரி இருக்கும்”..!! நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..!!

You May Like