தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் பாடிய பாடல் சிங்கிள் வெளியாகி உள்ளது.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, பொங்கலன்று திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இப்படத்தின் முதல் சிங்கள் புரோமோவை இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடவுள்ளதாக போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
ரஞ்சிதமே!ரஞ்சிதமே! மனசை களைக்கும் மந்திரமே, ரஞ்சிதமே!ரஞ்சிதமே! உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே ! என விஜய் தனது சொந்த குரலில் இந்த பாடலை பாடியுள்ளார்.