அமெரிக்க வாழ் மலையாள குடும்பத்தில் பிறந்து ’ஸ்வப்னா சஞ்சரி’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த 2016இல் தன்னுடைய 19-வது வயதில் மஜ்னு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அனு இம்மானுவேல். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகினார்.

இப்படத்திற்கு பிறகு தெலுங்கு படவாய்ப்புகள் வர, அக்கடதேசம் சென்று அதன்பின் ’நம்ம வீட்டு பிள்ளை’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தின் மூலம் காந்தக்கண்ணழகி என்ற பெயரோடு ரசிகர்களை மயக்கி வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்த அனு இம்மானுவேல், சில மாதங்களாக ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

’ராவணசுறா’ என்ற தெலுங்கு படத்தில் கமிட்டாகி நடித்து வரும் அனு, தற்போது மீண்டும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்து கருப்பு சேலையணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். லோ ஆங்கிளில் இடுப்பழகியாக ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
அனு இம்மானுவேலின் புகைப்படங்களை காண… https://www.instagram.com/p/Ci2jxZGOkuQ/?igshid=NzNkNDdiOGI=