fbpx

அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு விசித்திரமான நோயா..? விவாகரத்து வரை சென்றதற்கு இதுதான் முக்கிய காரணமா..?

சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அர்ச்சனா, தற்போது பன்முக திறமை கொண்டவராக பட்டையை கிளப்பி வருகிறார். திருமணத்திற்கு பிறகு மீடியா முன் வராமல் இருந்த அர்ச்சனா, கடந்த சில வருடங்களில் எல்லா தொலைக்காட்சிகளிலும் தொகுப்பாளராக முத்திரை பதித்து விட்டார். மேலும், இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய பெயரை கொஞ்சம் கெடுத்துக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். இவருடைய மகளும் மீடியாவில் இருப்பது இன்னுமே இவர்களை சுற்றி பல நெகடிவ் விமர்சனங்கள் எழுந்ததற்கு மிக முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இருந்தாலும் அர்ச்சனா அவருடைய பணியை அவர் போக்கில் செய்து கொண்டுதான் இருக்கிறார்.

அர்ச்சனாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். பொருளாதார ரீதியாக அர்ச்சனா நல்ல நிலையில் இருந்தாலும், மீடியாவை தன்னுடைய கனவாக நினைத்து வேலை செய்து வருகிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அர்ச்சனா, அவருடைய கணவரை விவாகரத்து செய்யும் நிலைக்கு போய்விட்டதாகவும், அவருடைய மகள் இந்த பிரச்சனையில் தலையிட்டு பேசிய பின் இருவரும் இணைந்ததாகவும் கூறியிருந்தார்.

இதை கேட்ட ரசிகர்களுக்கு இந்த விஷயம் ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. ஆனால், தற்போது தான் இந்த விவாகரத்து முடிவுக்கான காரணம் வெளிவந்துள்ளது. அர்ச்சனா சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதியாகி, அறுவை சிகிச்சை செய்து கொண்டதே அவரே தன்னுடைய சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அர்ச்சனாவுக்கு மூளையில் இருந்து ஒரு விதமான திரவம் கசிய ஆரம்பித்திருக்கிறது. இதனால் தான் கோபம் மற்றும் நெகட்டிவிட்டி அதிகமாகி தான் என்ன செய்கிறேன் என்பதையே சுயநினைவு இல்லாமல் செய்திருக்கிறார்.

அதற்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அர்ச்சனாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது சிகிச்சையின் மூலம் சரி செய்யப்பட்டாலும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் அந்த திரவம் கசிய வாய்ப்பு இருக்கிறதாம். இதனாலேயே எப்போ என்ன நடக்கும் என்று தெரியாத பயத்திலே தான் அவரும் அவருடைய குடும்பத்தினரும் இருக்கிறார்களாம்.

சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனாவும் அவ்வளவு ஆக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை கம்மி பண்ணிக் கொண்டிருக்கிறார். அர்ச்சனாவிற்கு இப்படி ஒரு விசித்திரமான நோய் இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

Chella

Next Post

'மருமகளை கூட்டிட்டு வாடா'..!! வாழ வழி சொன்ன தந்தையை வாழ விடாமல் அடித்தே கொன்ற மகன்..!! புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

Thu Jul 6 , 2023
ஆலங்குடியில் தந்தையை உருட்டு கட்டையால் அடித்துக் கொன்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள மேல சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (55). இவரது மனைவி வைரம் (50). இவர்களுக்கு சதீஷ்குமார் (31), திருநாத் (28), சோமசுந்தரம் (எ) அலெக்ஸ்(27) ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்குமார் மற்றும் திருநாத் ஆகிய இருவருக்கு திருமணமான நிலையில், சோமசுந்தரம் (எ) அலெக்ஸ் திருமணமாகாமல் சென்னையில் வேலை பார்த்து […]

You May Like