இந்த வயதிலும் சூப்பர் ஸ்டார் பழைய எனர்ஜியுடன் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதுவும் ஜெயிலர் படத்தில் தமன்னாவுடன் அவர் ஆடிய பாடல் நேற்று வெளியாகி இணையத்தையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியுடன் படத்தில் நடித்த நடிகைகள் சொந்த வாழ்க்கையில் 3 திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், இந்த 3 நடிகைகளுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், முதல் இரண்டு திருமண வாழ்க்கையும் பாதியிலேயே முடிவுற்றாலும் 3-வது கணவருடன் தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகர் விஜய்க்கு அம்மாவாக வாரிசு படத்தில் நடித்தவர் ஜெயசுதா. தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருக்கும் இவர், ரஜினியின் பாண்டியன் படத்தில் அவரது அக்காவாக போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவர் முதலாவதாக வடே ரமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சில காரணங்களால் அவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பிறகு நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், கடந்த 2017ஆம் நிதின் கபூர் மரணமடைந்தார். இந்நிலையில், ஜெயசுதா வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.
அடுத்தபடியாக ரஜினியுடன் அதிக படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் ராதிகா. ஊர்க்காவலன், நல்லவனுக்கு நல்லவன் போன்ற பல படங்களில் ராதிகா நடித்திருக்கிறார். இந்நிலையில், ராதிகா முதலாவதாக பிரதாப் போத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இரண்டாவதாக ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து அவரிடமிருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார். கடைசியாக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
அடுத்ததாக ரஜினியின் பொல்லாதவன் படத்தில் நடித்தவர் நடிகை லட்சுமி. இவர் சிவாஜி காலத்தில் இருந்து 3 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்டார். லட்சுமி முதலில் பாஸ்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த கல்யாணம் விவாகரத்தில் முடிய, அதன் பிறகு மலையாள நடிகர் மோகன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வாழ்க்கையும் பாதியிலேயே முடிய இயக்குனர் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வரை அவருடன் வாழ்ந்து வருகிறார். லட்சுமி சரியாக அடுத்தடுத்து 5 வருடங்களில் 3 திருமணங்கள் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.