fbpx

உருகி உருகி காதலித்த அர்ஜூன்..!! பிரபல நடிகருடன் ஓட்டம் பிடித்த நடிகை..!! யார் அவர் தெரியுமா..?

இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு, கட்டுமஸ்தான உடல் கட்டோடு… ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருபவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இவர், தமிழில் இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில் 1984இல் வெளியான ‘நன்றி’ என்கிற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், அடுத்தடுத்து தமிழில் நடிக்க இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தன.

அந்த வகையில், கடமை, நாகம், இளமை, வேஷம், எங்கள் குரல், போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நிலையான இடம் பிடித்த அர்ஜுன், பின்னர் 90-களில், ஜெய்ஹிந்த், மருதமலை, ஏழுமலை போன்ற ஆக்ஷன் படங்களை தேர்வு செய்து நடித்து அசத்தினார். இந்நிலையில், நடிகர் அருஜுனின் ஃபிளாஷ் பேக் காதல் ஸ்டோரி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர், எங்கள் குரல் மற்றும் யார் என்கிற திகில் படத்தில் நடித்த போது, அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர், நடிகை நளினி.

இந்த இரு படங்களிலுமே, இவர்களது கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அப்போது நளினியை அர்ஜுன் ஒருதலையாக உருகி உருகி காதலித்துள்ளார். இந்த காதலை தன்னுடைய நண்பர்களிடம் கூறிய அர்ஜுன், ஒரு முறை கூட நளினியிடம் கூறவில்லை என கூறப்படுகிறது. காரணம் நளினி அப்போது துணை இயக்குனராக இருந்து முன்னணி நடிகராக மாறிய நடிகர் ராமராஜனை காதலித்தாராம்.

காதலித்ததோடு, இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால், ராமராஜனுடன் ஓட்டம் பிடித்த நளினி ஒரு வாரத்திற்கு பிறகு திருமணமான பிறகு தான் வெளியவே வந்தார். இதனை அவரே பேட்டி ஒன்றிலும் கூறியுள்ளார் இந்த தகவல் ஃபிளாஷ் பேக் காதல் குறித்த தகவல் தற்போது மீணடும் பேசுபொருளாக மாறியுள்ளது.

அதே போல் அர்ஜுன் பெரிதாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்கியது இல்லை என்றாலும், இவருடன் நிபுணன் படத்தில் நடித்த ஸ்ருதி ஹரிஹரன் என்பவர் மட்டுமே, அர்ஜுன் மீது மீடூ புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். இந்த தகவலை அர்ஜுன் தரப்பு மறுத்துவிட்ட நிலையில், ஸ்ருதி ஹரிஹரன் உரிய ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்காததால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகர் அர்ஜுன் சமீப காலமாக ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், வில்லனாக மிரட்டி வருகிறார்.

Read More : ’அவரு வடிவேலு இல்ல குடிவேலு’..!! பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!!

English Summary

It is said that Arjun, who told his friends about this love, did not tell Nalini even once.

Chella

Next Post

“ வாய்வழி உடலுறவுக்கு கட்டாயப்படுத்தினார்..” WWE முன்னாள் நடுவரின் பாலியல் புகார் நெட்பிளிக்ஸ் சீரிஸில் அம்பலம்

Fri Sep 27 , 2024
'I was forced into oral sex with...', former WWF referee Rita Chatterton's rape accusation covered in Netflix docuseries Mr. McMahon

You May Like