தெலுங்கு மொழியில் நடிகர் அர்ஜுன் இயக்க உள்ள திரைப்படத்தில் அவர் மகளுடன் நடிக்க மறுப்பு தெரிவித்ததால் கேவலப்படுத்திவிட்டார் என்று கதாநாயகன் தெரிவித்துள்ளார்.
தமிழ் படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். தன் மகள் ஐஸ்வர்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் இயக்கி தயாரிக்கின்றார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக தெலுங்கு பட கதாநாயகர் விஷ்வக் நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருந்த நிலையில் ஹீரோ வரவில்லை என்றும் எத்தனையோ முறை போன் செய்து பார்த்தும் அவர் பதில் அளிக்கவில்லை என்றும் அர்ஜுன் கடுமையாக தெரிவித்து இருந்தார். மேலும் இது போன்ற அர்ப்பணிப்பு இல்லாத நடிகரை நான் பார்த்ததே கிடையாது. 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் இவரை போன்ற ஒரு நடிகருடன் நான் பணிபுரிய மாட்டேன். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை என்னுடைய படத்தில் நடிக்க வைக்க இருக்கிறேன் என்று காட்டத்துடன் தெரிவித்து இருந்தார்.
இது மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் விஷ்வக் சென் அர்ஜுனனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது நான் இதுவரை பல திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். எந்த திரைப்படத்திலும் நான் ஈடுபாடு இல்லாமல் கலந்து கொண்டது கிடையாது. அர்ஜுன் இயக்கும் திரைப்படத்தின் முதல் பாதி ஸ்கிரிப்ட் எனக்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் தரப்பட்டது. கதாநாயகியுடன் நடிக்க மறுத்ததால் அவர் இது போன்ற பிரஸ்மீட் அளித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் கருத்து சொல்லவோ, ஆலோசனை கூறவோ எனக்கு சரியான வாய்ப்பு கொடுக்கவில்லை. இது மன அழுத்தத்தை கொடுக்கும் என்பதால் தான் நான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒருபோதும் அந்த திரைப்படத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று நான் நினைத்தது கிடையாது. அர்ஜுனிடமிருந்து எனக்கு படத்தைப் பற்றி விவாதிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
மற்றபடி அர்ஜுனை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு கிடையாது. தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியிருப்பதால் எனது தரப்பில் இருந்து நான் விளக்கம் அளித்துள்ளேன் என்றும், அர்ஜுன் இயக்கும் படத்திற்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரஸ்மீட் நடத்தும் போது அர்ஜுன் நடிகருக்கு அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் கால் செய்ததற்கான ஆதாரங்களையும் காட்ட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.