சீரியல் பிரபலங்கள் அர்னவ்-திவ்யா என கூறினாலே என்ன பிரச்சனை என்பது மக்களுக்கு தெளிவாக தெரியும். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் பற்றிய நிறைய விஷயங்கள் வைரலாக பேசப்பட்டு வருகிறது. திருமணம் செய்தார்கள், திவ்யா கர்ப்பமானார், ஆனால் அர்னவ் தன்னை வயிற்றில் உதைத்துவிட்டார் என போலீஸில் புகார் அளித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரவர் அவர்களது வேலையை பார்த்து வர சமீபத்தில் திவ்யாவுக்கு குழந்தையும் பிறந்தது. அதன்பின் திவ்யா அர்னவ் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட அவரும் ஆடியோ வெளியிட்டு நடிகைக்கு பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில், திவ்யா வீட்டிற்கு பவுன்சர்கள் மற்றும் வழக்கறிஞருடன் சென்றுள்ளார் அர்னவ். ஆனால், கதவை திறக்காமல் திவ்யா இங்கே எதற்கு வந்தீர்கள், உங்களுக்கு இந்த வீட்டிற்குள் வர எந்த உரிமையும் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், போலீஸை அழைத்துள்ளேன் அவர்களிடம் பேசுங்கள் என கூறியிருக்கிறார். இவர்களின் விவகாரம் மீண்டும் விஷரூபமெடுத்துள்ளது.