படமே இல்லாமல் ஒரு சில படங்களை மட்டுமே நடித்துவரும் ஆர்யா சம்பள விஷயத்தில் கராராக நடந்துகொண்டதால் அந்த படத்திற்கு நடிகர் கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் கார்த்திக்கு அடுத்தடுத்து திரைப்படங்கள் வந்த வண்ணம் உள்ளன. அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்துவிட்ட காரணத்தினாலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த பெரும்புகழ்பெற்றதன் காரணத்தினாலும் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.
இந்நிலையில் ஆர்யாவுக்கு இதற்கு நேர் ஆப்போசிட்டாக ஒரு சில படங்களே கைக்கு வருகின்றன. பின்னர் ஒப்பந்தம் ஆகாமல், அதுவும் கையைவிட்டு நழுவிச் செல்கின்றது. சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கிய நலன் குமாரசாமி அடுத்ததாக ஆர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க இருந்தார். ஆனால் ஆர்யா அந்தப் படத்தில் நடிப்பதற்காக 15 கோடி வரை சம்பளம் கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் வேறு ஹீரோவை புக் செய்யும் படி கூறி இருக்கிறார்.
இதனால், ஆர்யாவுக்கு கிடைத்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும் கார்த்தி தன்னைத் தேடி வரும் நல்ல வாய்ப்புகளையும் விட்டுவிடாமல் ஏற்றுக்கொள்கிறார். அதனாலேயே இவர் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.
நலன் குமாரசாமியின் முந்தைய திரைப்படங்களைப் போலவே இந்த திரைப்படமும் வித்தியாசமான கதைக்களமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் சம்பள விஷயத்தில் ஓவர் அடாவடி செய்த காரணத்தால் ஒரு நல்ல படத்தை ஆர்யா மிஸ் செய்திருக்கிறார். தொடர்ந்து சில தோல்வி படங்களை கொடுத்து வந்த ஆர்யா தற்போது கொம்பன் முத்தையா இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்திற்கு பின்னர் சர்தார் படத்தில் நடித்தார். அதுவும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத்தந்தது. எனவே மார்க்கெட் அவருக்கு ஏறுமுகத்தில் உள்ளது. இப்போது மட்டும் 5,6 படங்களை கையில் வைத்துள்ளார். ராஜுமுருகன் இயக்கத்தில் நடித்து வரும் ஜப்பான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.