பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அசீம் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். இவரது தேர்வுக்கு பல எதிர்ப்புகளும், ஆதரவுகளும் கிளம்பி வருகின்றன. ஆனாலும், போட்டியில் ஜெயித்ததற்காக தனக்கு கிடைத்த 50 லட்சத்தில் தான் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது வாக்களித்தபடியே 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு படிப்பு செலவுக்கு கொடுக்க அவர் முன் வந்துள்ளார்.
கடந்த 2018 சையத் சோயா என்ற பெண்ணை அசீம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன் பின் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் கடந்த 2021 இல் டைவர்ஸ் பெற்றுக் கொண்டு பிரிந்து சென்றார்கள். இவர்களது பிரிவுக்கு காரணம் ஒரு சின்னத்திரை சீரியல் நடிகை என்றுதான் அடிக்கடி கூறப்பட்டு வந்தது.
ஆனால் இதை இவர்கள் இருவருமே மறுத்து விட்டார்கள். இந்நிலையில் அசீமின் முன்னாள் மனைவி புகைப்படங்கள் தற்போது நெட்டிசன்களிடம் பகிரப்பட்டு வருகின்றது. இதை கண்ட பலரும் அடேங்கப்பா அசீமுக்கு இவ்வளவு அழகான மனைவியா என்று கருத்து கூறி வருகின்றனர்.