நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நயன்தாரா, இன்று வரை உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்.
இவர் இந்திய அளவில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார். அந்த வகையில், ஒரு படத்தில் நடிப்பதற்காக ரூ.10 கோடி சம்பளம் பெறுகிறார். இந்நிலையில், 2022ஆம் ஆண்டு நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.165 கோடியாக உயர்ந்துள்ளது. அவர், விளம்பர நிறுவன ஒப்புதலுக்கு ரூ.5 கோடி பெறுகிறார். சென்னையில் நயனுக்கு இருக்கும் வீடுகளின் மதிப்பு ரூ.100 கோடியாகும். இதுதவிர இவருக்கு சொந்தமான தனி விமானம், பல்வேறு சொகுசு கார்களும் உள்ளன. நயன்தாராவின் ரூ.165 கோடி சொத்துடன், விக்னேஷ் சிவன் சொத்தையும் சேர்த்தால் மொத்தம் ரூ.215 கோடி சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.