விஜய்டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளியில் பங்கேற்ற தீபா சங்கரின் பழைய புகைப்படம் அட நம்ம குக் வித் கோளி தீபாவா இது என கேட்கும் அளவிற்கு உள்ளார்.
குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீபா பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். சன்டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியலிலும் இவர் நடித்துள்ளார். அவர் தனது பழைய புகைப்படத்தை வெளியிட்டதில் இருந்து எப்படி இருந்த தீபா இப்படி மாறிட்டாங்க என அனைவரும் கேட்டு வருகின்றனர்.
குக்வித் கேமாளி சீசுன் 2ல் ஷகிலா , பாபாபாஸ்கர், அஸ்வின், தர்ஷா , பவித்ரா , கனி உள்ளிட்ட பலர் குக்குகளாகவும், புகழ் , பாலா , சிவாங்கி, மணி மேகலை , சரத், சுனிதா , விஜே பார்வதி டிக்டாக் சக்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தீபா குக்காக இருந்தாலும் நகைச்சுவையில் அப்பாவித்தனமும் வெகுளித்தனமும் இருந்ததால் மக்களிடையே கவரப்பட்டார்.
இதையடுத்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது. டாக்டர் படத்திலும் பின்னர் ஏராளமான படங்களில் நகைச்சுவை பாத்திரத்தில் தோன்றி உள்ளார்.