fbpx

மோசமான புயல்..!! திடீரென மாயமான பிரபல நடிகர்..!! மலையில் கிடைத்த உடல்..!! பெரும் பரபரப்பு..!!

ஏ ரூம் வித் தி வியூ, ஈசி சிக்ஸ், தி டர்ன் ஆஃப் தி ஸ்க்ரூ, தி சூசன், லீவிங் லாஸ் வேகாஸ் போன்ற படங்களில் நடித்தவர் ஜுலியன் சாண்ட்ஸ். இவருக்கு 65 வயதாகிறது. இவர் கடந்த ஜனவரி 13ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள சான் கேப்ரியல் மலையில் ஏறத்தொடங்கியிருக்கிறார். பின்னர் அங்கிருந்து எங்கு போனார் எனத் தெரியவில்லை. அப்போது அந்தப் பகுதியில் பனிக்காலத்தில் மோசமான புயல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதத்தில் 8 முறை தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை காலை 10 மணியளவில் அந்தப் பகுதியில் மலையேற சென்றவர்கள் அங்கு ஒரு உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நடிகர் காணாமல் போன இடத்திலேயே கிடைத்ததால் அது ஜுலியன் சாண்ட்ஸாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் விசாரணைக்கு பிறகே அந்த உடல் யார் என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

நாக்கிற்கு பதில் ஆணுறுப்பில் ஆப்ரேஷன்..!! தவிக்கும் சிறுவன்..!! கதறும் பெற்றோர்..!! நடந்தது என்ன..?

Tue Jun 27 , 2023
3 வயது சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாக்கு அறுவை சிகிச்சைக்காக 3 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆனால், சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை (சுன்னத் வகையான அறுவை சிகிச்சை) செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், ’மருத்துவ ஊழியர்கள் கையெழுத்து வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட படிவத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. […]

You May Like