சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரேகா நாயர். பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார். இது சர்ச்சையான நிலையில், நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், ரேகா நாயரை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து, திருவான்மியூரில் நடைப்பயிற்சி சென்ற பயில்வான் ரங்கநாதனை வழிமறித்த ரேகா நாயர், அவரை கடுமையாக திட்டினார். அங்கு இருவரும் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயில்வான் ரங்கநாதனை ரேகா நாயர் தாக்கவும் செய்தார்.
பயில்வான் ரங்கநாதன் திரையுலகினர் குறித்து தொடர்ந்து தவறான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், அவர் குறித்து ரேகா நாயர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில், ”பயில்வான் செத்தா நான் பட்டாசு வெடித்து கொண்டாடுவேன். அன்னைக்கு தான் எனக்கு தீபாவளி. நான் என் வாழ்க்கையில் பட்டாசு வெடிச்சதே இல்லை. நரகாசூரன் செத்த நாளை தமிழர்கள் தீபாவளியா கொண்டாடுறாங்க. என்னுடைய நரகாசூரன் பயில்வான் ரங்கநாதன்” என்று பேசியிருந்தார்.