விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இம்முறை ஒளிபரப்பாகவுள்ள சீசன் 7-யும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் 7-வது சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது.
இந்த சீசனில் எந்தெந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுதொடர்பாக நெட்டிசன்களும் போட்டியாளர்களின் உத்தேசப் பட்டியலை இணையத்தில் வெளியிட்டு வருகின்றன.
அந்தவகையில், பிரபல செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பிக்பாஸ் சீசன் 7இல் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது அவருக்கு போட்டியாக மற்றொரு செய்தித் தொகுப்பாளர் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ரஞ்சித்துக்கு போட்டியாக முபஸ்ஸிர் கலந்து கொள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. எனவே, யார் வருகிறார்கள் என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.