விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 7-வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. எப்போதும் ஒரு வீட்டிற்குள் சுமார் 18 போட்டியாளர்களை அடைத்து வைத்திருப்பார்கள். ஆனால், இம்முறை ஒரு சின்ன மாற்றம் ஏற்படுத்தும் விதமாக 2 பிக்பாஸ் வீடுகள் தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
இதற்கிடையே, பிக்பாஸ் போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது. இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்றால் சும்மாவா? சண்டைக்கு, சர்ச்சைக்கும் ஊறிப் போனவர்களை தேடி பிடித்து அழைத்து வருவதுதான் இவர்களின் முக்கிய வேலையாக இருக்கும். அதிலும், சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை நோண்டி நொங்கு எடுத்து வெளிப்படையாக யூடியூப் சேனலில் பேசி வருபவர் பயில்வான். இவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்புவதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்நிகழ்ச்சிக்கு நடிகர் ரேகா நாயரிடம் பேசப்பட்டு விட்டது. இவர் முடிவான நிலையில், தற்போது பயில்வான் ரங்கநாதனையும் உள்ளே அனுப்புகிறார்கள் என்றால், அங்கே இனி வாயால் சண்டை நடக்காது. களத்தில் இவர்கள் இருவருமே இறங்கி அடிப்பார்கள். மேலும், இவர்கள் இருவருமே சர்ச்சையாக பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான சூழ்நிலையில், இவர்கள் இருவரையும் ஒரே கூண்டில் அடைத்து இவர்கள் போடும் சண்டையை வேடிக்கை பார்ப்பதற்காக விஜய் டிவி ஏற்பாடு செய்துள்ளதாம். ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சையும் சண்டைக்கும் பஞ்சமே இருக்காது. தற்போது ரேகா நாயர் காலில் சலங்கை கட்டி ஆடுவதற்கு ஏற்ற மாதிரி பயில்வானையும் அனுப்பி ரத்த கலவரத்தையே உண்டாக்கப் போகிறார்கள்.