பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்தே ரூல்ஸை மீறி விளையாடுவது, அடுத்தவர்களை மதிக்காமல் மோசமாக இமிடேட் செய்வது, தினம் தோறும் சண்டை போடுவது என ஃபவுல் கேம் ஆடி வருகிறார் அசீம் என்கிற குற்றச்சாட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு முறை கமல் அசீமின் அராஜக செயலை கண்டித்திருந்தார். இன்னொரு முறை இப்படி செய்தால், நானே ரெட் கார்டு கொடுப்பேன் என்றும் எச்சரித்திருந்தார். ஆனால், அதையெல்லாம் மீறி இந்த வாரம் அமுதவாணன் கன்னத்திலேயே அசீம் அடித்து விட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், பிக்பாஸ் ரசிகர்கள் அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகரான அசீம் இந்த சீசனில் பங்கேற்றதில் இருந்தே அனைவரிடமும் தொடர்ந்து சண்டை போட்டு வருகிறார். வார இறுதி நாட்களில் பாலாஜி முருகதாஸை போலவே சைலன்ட் ஆகி எஸ்கேப் ஆகி வருகிறார். ஆனால், பாலா கூட நேர்மையான விஷயத்துக்குத் தான் சண்டை போடுவார் என்றும் அசீம் அராஜகம் செய்து வருகிறார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் கைகலப்பு இல்லாமல் இத்தனை சீசன்கள் சென்று கொண்டிருந்த நிலையில், இந்த சீசன் கைகலப்பு வரை சென்று விட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தான் மட்டுமே கேம் விளையாட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவுட் ஆகி அசிங்கமும் பட்டார். அமுதவாணன், கதிர் இடையே போட்டி நடைபெற்ற நிலையில், இடையே புகுந்த அசீம் சண்டையை பெரிதாக்கி விட்டார்.

அசீம் அமுதவாணன் கன்னத்தில் கை வைத்து அழுத்திய நிலையில், அசீம் தன்னை கன்னத்தில் அடித்து விட்டார் என அமுதவாணன் பிரச்சனையை கிளப்பியதும். அதை பார்த்துக் கொண்டிருந்த ஷிவின் அசீம் மட்டும் உங்களை அடித்து இருந்தால் நிச்சயம் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படும் என்று கூறினார். ஒவ்வொரு வாரமும் அசீமுக்கு அட்வைஸ் செய்து கொண்டே அவரை காப்பாற்றி வரும் கமல்ஹாசன், இந்த வாரமாவது ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அசீம், அமுதவாணனை அறைந்தாரா கன்னத்தில் கை வைத்து அழுத்தினாரா? என்பதற்கு குறும்படம் போட்டுக் கண்டித்து மட்டும் விடுவார் கமல், இந்த வாரம் அசீம் நாமினேஷனில் இல்லாத நிலையில் ரொம்பவே ஆட்டம் போட்டு வருகிறார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
அசீமுக்கு எதிராக ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் திரும்பிய நிலையில், தான் அடிக்கவே இல்லை என மணிகண்டனிடம் விளக்கம் கொடுத்த அசீம், கேமராவை பார்த்து அப்படியே அப்பாவி போல நான் வீட்டுக்குப் போறேன், என்னை அனுப்பிடுங்க என வீக்கெண்ட் டிராமா போட ஆரம்பித்து விட்டார்.