இன்றைய ப்ரோமோவை பார்க்கும்போது, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்று தெரிகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில், கமலின் பஞ்சாயத்து முடிந்த பின், குறைந்த வாக்குகளை பெற்ற நிவாஷினி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து, இன்றைய ப்ரோமோவில் புதிய வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க்கிற்கு தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. முதல் ப்ரோமோவில், நந்தினி இந்த வாரத்தின் கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். அதன் பின், அனைவரையும் ஒரு இடத்தில் கூடுகின்றனர். ஆனால், தனலட்சுமி மட்டும் உறங்கும் அறையில் உள்ள கட்டிலை விட்டு நகரவில்லை. மற்ற போட்டியாளர்கள் அவரை அழைக்க, “நான் யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை. எப்படி மேல போச்சு” என்று கோபத்தில் சத்தம் போட, ரச்சித்தா மேல போகல என்று கூறியதற்கு, “நீங்க தயவு செஞ்சு போறீங்களா” என்று கத்துகிறார்.
இதை பார்க்கும் போது, கேப்டன்சி டாஸ்க்கில் ஏதோ நடந்துள்ளது என்று தெரிகிறது. அதனை ஏற்றுக்கொள்ளாத தனலட்சுமி மற்றவர்களுடன் சண்டை போட்டு வருகிறார். அடுத்து வந்த இரண்டாவது ப்ரோமோவில், ஜனனி, தனலட்சுமி, ஷிவின், ஆயிஷா மற்றும் நந்தினி ஆகியோர் உள்ளனர். சமையல் அணியில் ஆட்களை பிரிக்கும் போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. கேப்டன்சி டாஸ்க்கில் கடுப்பான அவர், இந்த விஷயத்திலும் கடுப்பாகி, “ஏன் கிட்ட பேசாத” என்று ஷிவினிடம் சொல்கிறார்.
முதலில் எப்போதும் கடுப்பாக இருந்த தனலட்சுமி இடையில் சைலண்டாக மாறினார். பின்னர், அசிமுடன் பயங்கரமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸையும் திட்டி தீர்த்தார். பிறகு மன்னிப்பும் கேட்டார். தற்போது மீண்டும் அந்நியன் விக்ரம் போன்ற நடவடிக்கையை தொடர்ந்துள்ளார்.