விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சி ஒரு மாதம் கடந்த நிலையில், சில போட்டியாளர்கள் தங்களுக்கான திறமையை வெளிக்காட்டாமல் உள்ளனர். குறிப்பாக விஜே கதிரவனை சொல்லலாம். ஏனென்றால் சண்டை, போட்டி என எதிலுமே ஈடுபாடு இல்லாதவாறு கதிரவன் இருந்தார். ஆனால், நேற்று அவருக்கு தரமான டாஸ்க் கொடுக்கபட்டது. அதாவது ராணியான ரக்ஷிதா மற்றும் அசீம் இருவருக்கும் ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபரை தேர்ந்தெடுத்து இரவுக்குள் எப்படியாவது ராஜாவின் தங்கக் கட்டிகளை திருடி வெளியில் உள்ள குகைக்குள் வைக்க வேண்டும்.
ஆனால், இதற்கு பலத்த பாதுகாப்பு இருந்தும் சாதுரியமாக கதிரவன் அந்தப் பெட்டியை குகைக்குள் வைத்து விட்டார். இவருக்கு இப்படி ஒரு திறமையா என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கதிரவன் தரமான சம்பவத்தை செய்துள்ளார். இந்நிலையில் ரக்ஷிதா, ராபர்ட் மாஸ்டரை தொடர்ந்து தற்போது சிவின், கதிரவன் மீது காதலில் விழுந்துள்ளார். ஏற்கனவே சிவின் ஒருவரை காதலித்து தனது அம்மாவால் அந்த காதலை தொடர முடியாமல் பிரிவதாக முடிவு எடுத்து பிரிந்துவிட்டார். ஆனால், தற்போது அந்த காதலன் கஷ்டப்பட்டு வருவதாக ரக்ஷிதா மற்றும் விக்ரமன் ஆகியோரிடம் சிவின் கூறியிருந்தார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இறுக்கமான சூழ்நிலை மற்றும் பார்த்த முகங்களையே பார்ப்பதால் கதிரவன் மீது சிவினுக்கு காதல் மலர்ந்துள்ளது.
இதை ஷிவின் நேரடியாக அவரிடம் சொல்லவில்லை என்றாலும், இந்த வீட்டில் ரச்சிதா எனக்கு ஒரு உறவு போல, அதுபோல் தான் உங்களையும் பார்க்கிறேன். உங்களை ஒரு போட்டியாளராக என்னால் பார்க்க முடியவில்லை என்ற தனது காதலை சூசகமாக கதிரவனுக்கு ஷிவின் புரிய வைத்தார். இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாத கதிரவன், என்னை ஒரு போட்டியாளராகவே பார்க்கவில்லையா, ஏன் எனக்கு ஒன்னும் புரியவில்லை என்பது போல இருக்கிறார். எப்போதுமே கதிரவன் தனது நிலைப்பாட்டில் இருந்து விலகாமல் மிகவும் கவனமாக விளையாடி வருகிறார்.